» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் ரூ.27,000 கோடிக்கு மேல் வங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஈ.ஏ.எஸ். சர்மா, அனில் அம்பானியின் 'திருபாய் அம்பானி' குழும நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை மோசடி செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்: மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "இந்த 27,337 கோடி ரூபாய் மோசடிக்கு அனில் அம்பானி தான் மூளையாகச் செயல்பட்டார் என்பதை விசாரணை அமைப்புகளே ஒப்புக்கொண்டுள்ளன. அப்படியிருக்கையில் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? அவர் என்ன புனிதரா?" என மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
அரசு தரப்பு வாதம்: மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுவரை 9 எப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3,960 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 31 பேருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
அனில் அம்பானி தரப்பு: அனில் அம்பானி தரப்பில் ஆஜரான கபில் சிபல், "எனது கட்சிக்காரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார். இந்த விவகாரத்தில் அவரே கூட ஏமாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்வருமாறு உத்தரவிட்டனர்: பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், இந்த விசாரணை எவ்வித காலதாமதமும் இன்றி வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும். விசாரணையில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் நீதிமன்றம் கண்டிப்பாகத் தலையிடும்.
விசாரணை அமைப்புகள் கோராத வரை நீதிமன்றம் ஒருவரைக் கைது செய்ய உத்தரவிட முடியாது, ஆனால் ஆதாரங்களைத் திரட்டுவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று வழக்கை வரும் ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவருக்கு எதிராக இவ்வளவு பெரிய மோசடிப் புகாரில் உச்ச நீதிமன்றம் காட்டும் தீவிரம் இந்தியத் தொழில் மற்றும் வங்கித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)


