» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாகவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த டி.கே.சிவக்குமார், அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்குத் தொலைபேசி வாயிலாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். கர்நாடகாவில் எங்களது ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தொடர்ந்து நல்லாட்சி நடைபெற முருகப்பெருமான் அருள் புரிவார் என்று கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், மத்திய அரசின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளைச் சாடினார். "பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் எனப் பிரதமர் மோடி கூறுகிறார். இது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களால் கூட இதனைப் பின்பற்ற முடியாது.
சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து விறகைத் தேடுங்கள் என்பதும், தங்கம் வாங்காதீர்கள் என்பதும் ஏற்புடையது அல்ல. தங்கம் என்பது மக்களின் உணர்வுப்பூர்வமான சொத்து. அதன் விலையைக் கட்டுப்படுத்தாமல், மக்களை வாங்க வேண்டாம் எனக் கூறுவது மத்திய அரசின் தேசிய அளவிலான தோல்வியைக் காட்டுகிறது.
தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் மற்றும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்: "தமிழக த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது என்பது கட்சியின் உயர்மட்டத் தலைமை எடுத்த கொள்கை முடிவாகும். தி.மு.க-வுடன் நீண்ட காலமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது உண்மைதான்.
எனினும், தற்போது தமிழகத்தில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே த.வெ.க. அரசில் காங்கிரஸ் பங்கேற்கிறது. இது மதச்சார்பற்ற கொள்கையைக் காக்க காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள நல்லதொரு வாய்ப்பு." என்று விளக்கமளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)

செப்.30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
வெள்ளி 15, மே 2026 12:03:01 PM (IST)

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சதத்தை நெருங்கியது: லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்வு
வெள்ளி 15, மே 2026 11:38:49 AM (IST)

கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசன்: காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:50:44 PM (IST)

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: சர்ச் தலைவர்கள் 3 பேர் பலி;தேசிய நெடுஞ்சாலை மூடல்!
வியாழன் 14, மே 2026 4:45:41 PM (IST)

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 93.84% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 2-வது இடம்!
புதன் 13, மே 2026 4:07:50 PM (IST)


