» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசக் கட்டமைப்பிற்கு வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி புகழஅஞ்சலி!

புதன் 15, ஜூலை 2026 4:47:47 PM (IST)

ModiKamaraj.jpg

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி காமராஜரின் தேசப் பணிகள் மற்றும் கல்விச் சேவைகளை நினைவுகூர்ந்து செய்தி வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி காமராஜர் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், கே.காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்த காமராஜர், தனது வாழ்வைத் தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் காமராஜர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, எதிர்கால தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory