» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: விஜய் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் பதில்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 12:50:33 PM (IST)
இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்க மாட்டோம் என்று இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்" என்று பேசியிருந்தார்.இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் விஜித ஹேரத் கொழும்புவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விஜித ஹேரத் கூறியதாவது: முதலாவதாக கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு ஆகும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பதற்கு ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவார்கள். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.
இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை.
அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த ஒரு ராஜதந்திர செயல்பாடுகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்று தெளிவாக கூறுகின்றேன். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம். எனவே அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
தமிழன்Aug 28, 2025 - 04:54:52 PM | Posted IP 162.1*****
இலங்கை காரன் எப்படியெல்லாம் தெலுங்கன் மாதிரி ஏமாத்துறான், நம்ம மொதல்வர் சுடாலின் ஏன் வாய் திறக்காது ??
ஓட்டு போட்ட முட்டாள்Aug 28, 2025 - 04:52:53 PM | Posted IP 162.1*****
முதல்ல கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படித்தவரை , அவர் குடும்பத்தையும் செருப்பால் அடிக்க வேண்டும்
டேய்Aug 28, 2025 - 04:51:46 PM | Posted IP 162.1*****
மோடியிடம் முறையிட்டால் நீ காலி தான்
ALLELUYAAug 28, 2025 - 03:36:51 PM | Posted IP 172.7*****
அவர் கச்சதீவை சினிமாவில் மீட்டு விடுவார்.....இந்த மாதிரி மங்குனிகளை என்ன சொல்வது....
மக்கள்Aug 28, 2025 - 02:55:54 PM | Posted IP 104.2*****
உங்கள் விஜய் முதல்வராக மீட்கபடும்
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவுக்கு நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் மீது கடும் நடவடிக்கை : டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:54:26 AM (IST)

வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திங்கள் 17, நவம்பர் 2025 4:04:28 PM (IST)

சவுதி அரேபியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து : 42 இந்தியர்கள் பலி
திங்கள் 17, நவம்பர் 2025 11:59:28 AM (IST)

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்களுக்கு வரி குறைப்பு: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:37:26 PM (IST)

ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவி: இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!!
சனி 15, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு: நவம்பர் 17ல் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 12:28:11 PM (IST)





ஸ்டாலின் தான் வாராரு அல்வா தர போறாருAug 28, 2025 - 04:59:33 PM | Posted IP 172.7*****