» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் அறிவிப்பு
வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:30:52 PM (IST)
நேபாளத்தில் வாக்களிக்கும் வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது குறித்து அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி, நாட்டு மக்களிடம் முதல் முறையாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க குறைந்தபட்ச வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16 ஆகக் குறைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
18 வயதை எட்டிய இளைய தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவும், வாக்காளர் பட்டியலை நீட்டிக்கவும் தற்போதுள்ள தேர்தல் சட்டம் ஒரு உத்தரவு மூலம் திருத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குடிமக்கள், இடம்பெயர்ந்து அண்டை நாட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நேபாளத்தில் 16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். 16 வயதில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றாலும், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:56:02 PM (IST)

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்
புதன் 1, அக்டோபர் 2025 11:49:23 AM (IST)

இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்பின் 21 அம்ச அமைதித் திட்டம்: முஸ்லிம் நாடுகள் ஆதரவு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:01:26 PM (IST)

சீனாவில் ரூ.336 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!
திங்கள் 29, செப்டம்பர் 2025 12:09:28 PM (IST)

ஆஸி. நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவா : செங்கோல் வழங்கி கவுரவிப்பு!
சனி 27, செப்டம்பர் 2025 12:17:09 PM (IST)

ரஷியா போரை நிறுத்த வல்லரசுகள் உதவாவிடில் ஆயுத போட்டி ஏற்படும் : ஸெலென்ஸ்கி
வெள்ளி 26, செப்டம்பர் 2025 12:56:47 PM (IST)
