» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நிகோலஸ் மதுரோ விரைவில் நாடு திரும்புவார்: பேரவையில் மகன் உருக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 11:59:27 AM (IST)

அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்புவார் என்று அவரது மகன் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா பேரவையில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார்.
வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்ற பிறகு கூடிய பேரவையில் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா உரையாற்றினார். இடைக்கால அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டு உறுதி மொழி எடுத்துகொண்டார்.
பின்னர் தனது தந்தை நாடு கடத்தப்பட்டுள்ளது குறித்து அவர் பேசியதாவது, தந்தையே, உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் வலிமையுடையவர்களாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள். நீங்கள் திரும்பும் வரை நாட்டு மக்களுக்கான கடமைகளைச் செய்வோம்.
நம் தாய் நிலம் மேன்மையான மக்களின் கையில்தான் உள்ளது தந்தையே. வெனிசுவேலா நிலத்தில் நான் விரைவில் உங்களை கட்டியணைப்பேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
என் தாய் சிலியாவும் என்னை விரைவில் தாய் நிலத்தில் சந்திப்பார். தாய் நிலத்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்வீர்கள். தாய் நாட்டிற்கு என்ன வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நீங்கள் என்றுமே வெனிசுவேலாவின் தலைவர்தான் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிகோலஸ் மதுரை நியூ யார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதே நாளில், குய்ர்ரா இவ்வாறு பேரவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

நான் எந்த தவறும் செய்யவில்லை: நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ வாதம்!!
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:58:22 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; வரியை உயர்த்துவோம்: இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 5, ஜனவரி 2026 12:00:57 PM (IST)

வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்ப பணியாற்ற தயார் : ஜப்பான் பிரதமர்
திங்கள் 5, ஜனவரி 2026 11:53:40 AM (IST)

