» செய்திகள் - விளையாட்டு » உலகம்
2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இஸ்ரேல், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர்), பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் கூட்டாக நோபல் பரிவு அறிவிக்கப்படுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு: 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை'-க்கு (László Krasznahorkai) அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு: அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

