» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவுதி அரேபியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து : 42 இந்தியர்கள் பலி
திங்கள் 17, நவம்பர் 2025 11:59:28 AM (IST)

சவுதி அரேபியாவில் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். அப்போது அந்த பஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் ஒரே ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
அவர்கள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மெதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

நிகோலஸ் மதுரோ விரைவில் நாடு திரும்புவார்: பேரவையில் மகன் உருக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 11:59:27 AM (IST)

நான் எந்த தவறும் செய்யவில்லை: நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ வாதம்!!
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:58:22 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; வரியை உயர்த்துவோம்: இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 5, ஜனவரி 2026 12:00:57 PM (IST)

