» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கண்டனம்

வியாழன் 20, நவம்பர் 2025 12:04:16 PM (IST)

உக்​ரைன் மீது ஒரே இரவில் 470 ட்ரோன்​கள், 48 ஏவு​கணை​களை வீசி ரஷ்யா கடுமை​யான தாக்​குதலை நடத்​தி​யதற்கு அதிபர் ஜெலன்​ஸ்கி கண்​டனம் தெரி​வித்​தார்.

அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ படை​யில் சேர உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி விரும்​பி​னார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. அதை ஜெலன்​ஸ்கி நிராகரித்​த​தால், கடந்த 2022ம் ஆண்டு பிப்​ர​வரி 24ம் தேதி உக்​ரைன் மீது ரஷ்யா போர் தொடங்​கியது. போரை நிறுத்த சர்​வ​தேச அளவில் எடுக்​கப்​பட்ட முயற்​சிகள் தோல்வி அடைந்​தன. இதற்​கிடை​யில் இரு தரப்​பும் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், உக்​ரைன் மீது நேற்​று ​முன்​தினம் இரவு 470 ட்ரோன்​கள், 48 ஏவு​கணை​களை வீசி ரஷ்யா கடுமை​யான தாக்​குதலை நடத்​தி​யது. தாக்​குதலுக்​குப் பிறகு பற்றி எரி​யும் கட்​டிடங்​கள், சேதம் அடைந்த இடங்​களின் வீடியோவை உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி நேற்று வெளி​யிட்டு கண்​டனம் தெரி​வித்​தார்.

இதுகுறித்து ஜெலன்​ஸ்கி கூறிய​தாவது: ரஷ்யா தாக்​குதலில் டெர்னோபில் பகு​தி​யில் 9 மாடி குடி​யிருப்பு கட்​டிடம் தரைமட்டமாகி உள்​ளது. இதில் 9 பேர் உயி​ரிழந்​தனர். 12-க்​கும் மேற்​பட்​டர்​கள் காயம் அடைந்​தனர். கட்​டிட இடி​பாடு​களில் சிக்கி உள்​ளவர்​களை மீட்​கும் பணி​யும் பற்றி எரி​யும் கட்​டிடங்​களில் தீயை அணைக்​கும் பணி​யும் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தாக்குதலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு ஜெலன்​ஸ்கி கூறியுள்​ளார்.


மக்கள் கருத்து

கந்தசாமிNov 20, 2025 - 02:36:04 PM | Posted IP 104.2*****

சளைக்காமல் அடிமேல் அடிவாங்கும் உக்ரைன் அமெரிக்கா உன்னை வைத்து பிழைப்பு நடத்துகிறது தெரியாத அப்பாவியாக இருக்கிறான் ஜெலன்ஸிகி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory