» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்புப் பொறுப்பை மற்ற உலக நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'ட்ரூத்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள்: ஈரான் போரின் முக்கிய கட்டத்தை அமெரிக்கா எட்டிவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டதால், ராணுவ நடவடிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச எரிபொருள் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் சுமூகமாகச் செல்வதை உறுதி செய்யும் பொறுப்பை மற்ற நாடுகளும் ஏற்க வேண்டும்.
இனி அமெரிக்கா மட்டுமே இந்தப் பாதையைக் கண்காணிக்கும் நிலையில் இருக்காது. அந்தப் பாதையைப் பயன்படுத்தும் நாடுகள் அதன் பாதுகாப்பை உறுதி செய்யத் தலைமையேற்க வேண்டும். மற்ற நாடுகள் உதவி கோரினால் மட்டுமே அமெரிக்கா தலையிடும்; மற்றபடி நாடுகள் தங்களது சொந்தப் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கட்டுப்பாடுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு அமெரிக்கா அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது போர் நிறுத்தப் பரிசீலனை குறித்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)


