» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவை அதிரவைத்த வடகொரியா: 15,000 கி.மீ தொலைவு பாயும் ஏவுகணை சோதனை வெற்றி!
திங்கள் 30, மார்ச் 2026 9:26:02 AM (IST)

உலக நாடுகளின் எதிர்ப்பையும், பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா தனது ராணுவ வலிமையை நிரூபிக்கும் வகையில் அதிநவீன ஏவுகணை என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
வடகொரியாவிலிருந்து சுமார் 15,000 கி.மீ தொலைவில் உள்ள அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளி நாடுகளைத் தாக்கும் திறன் கொண்டது. கார்பன் நார் கலவை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த என்ஜின், திட எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. இது திரவ எரிபொருளை விட மிக வேகமாக ஏவப்படக்கூடியது.
கடந்த செப்டம்பரில் 1,970 கிலோ டன்னாக இருந்த உந்துவிசை, தற்போது 2,500 கிலோ டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல், ஒலியின் வேகத்தில் சென்று தாக்கும் வகையில் இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தரைநிலை ஜெட் சோதனை (Ground Jet Test) மிகப்பெரிய வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)


