» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் உடனான மோதலில் மிக விரைவான வெற்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:57:28 PM (IST)

ஈரான் உடனான ராணுவ மோதலில் அமெரிக்கா மிக விரைவில் வெற்றியை அடையப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய போர் சூழல் குறித்துப் பேசினார்.
ஈரான் ஒரு வலிமையான நாடு மற்றும் அந்த நாட்டு மக்கள் சிறந்த போராட்ட குணம் கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் தற்போது அவர்களின் ராணுவ பலம் சிதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் களத்தில் இருக்கிறோம். மிக விரைவில் நாங்கள் வெற்றியைப் பெறப் போகிறோம். ஈரானிடம் தற்போது கடற்படை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. அவர்களின் 158 கப்பல்கள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஈரான் கமாண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், முன்னாள் தளபதி காசிம் சோலைமணி கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். "உலக வரலாற்றிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்த சோலைமணியை நாங்கள் தீர்த்துக்கட்டினோம்," என்றார்.
ஈரான் உடனான தற்போதைய போர் பதற்றங்களுக்கு இடையே, ஒரு உடன்படிக்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசிய டிரம்ப்: "ஈரான் எங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்த வார இறுதிக்குள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், தற்போதுள்ள தற்காலிக உடன்படிக்கைகளை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், மீண்டும் முழுவீச்சில் போர் தொடங்கும்," என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கு ஆசியாவில் 'ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) மூலம் ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)

சீனாவை சூறையாடிய 'நவுல்' புயல்: 350 விமானங்கள் ரத்து - 7¼ லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
திங்கள் 27, ஜூலை 2026 8:24:00 AM (IST)

ஃபீல்ட்ஸ் மெடல்: 100 ஆண்டுகால புதிருக்கு விடை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் சாதனை!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:02:09 PM (IST)


