» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!

புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

JapanEarthQuak.jpg

ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் படையினர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர். 

கிழக்காசிய நாடான ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் காரணமாகப் பல கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்தது மற்றும் பல்வேறு பாதிப்புகளில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பின் அது திரும்பப் பெறப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோர மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்து 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 

பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால், கியூஷுவில் உள்ள பல மாகாணங்களுக்கு அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. 40,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினரும், அவசரகால மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இரவு பகலாகத் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory