» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற மூன்று சவுதி எண்ணெய் கப்பல்கள், ஏமன் கடற்கரைப் பகுதியைத் தவிர்க்கும் பொருட்டுத் திரும்பிச் சென்றுள்ளன.
சூயஸ் கால்வாயை நோக்கிச் சென்று கொண்டிருந்த சின் லாங் யாங், ரோடோஸ், அமேசான் ஆகிய மூன்று எண்ணெய் கப்பல்கள், ஹவுதி அமைப்பினரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளில், இச் சம்பவம் பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
சவூதி அரேபியாவுக்கு எதிராகக் கடற்படை முற்றுகையை ஹவுதி அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்நடவடிக்கை வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் வர்த்தகத்திற்குமான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
கப்பல் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில், சவூதி அரேபிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீறிச் செயல்படும் கப்பல்கள் எந்த இடத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் பாதையில் ஆபத்து:
செங்கடலின் முகத்துவாரத்தில் உள்ள பாப் அல்-மண்டேப் நீரிணையின் கடற்கரை உட்பட வடக்கு ஏமன் பகுதியை ஹவுதி கிளர்ச்சிக் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
செங்கடலை ஏடன் வளைகுடா, இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் இப் பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபிய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப் புதிய எச்சரிக்கை காரணமாக ஆசிய வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர வேண்டிய சரக்குகளுக்கு வாரக்கணக்கில் கூடுதல் தாமதம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)


