» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனம்: வைகோ ஆவேசம்!

புதன் 29, மார்ச் 2023 4:21:20 PM (IST)

"காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட சேரன்மாதேவி காவல் அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ். தமது காவல் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கிடைத்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவை காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்களாகும். பெருமைக்குரிய இந்திய காவல் பணி நிலையில் உள்ள ஓர் அலுவலரின் இச்செயல்கள் கடுமையான குற்றச் செயல்களாகும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அலுவலரை காத்திருப்போர் பட்டிலில் வைத்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி வழிகாட்டுதலில் முழுமையான அர்ப்பணிப்புடன் மக்கள் போற்றும் வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல் துறையின் பெருமைக்கு இப்படிப்பட்டவர்களால் களங்கம் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டோரிடம் புகார்கள் பெற்று, இவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

unmaiMar 30, 2023 - 04:18:18 AM | Posted IP 162.1*****

Repeated offenders should be allowed to break their legs in the toilet rather than pulling their teeth out.

அடிக்கலைSep 5, 1680 - 02:30:00 AM | Posted IP 162.1*****

என்றால் போலீஸ் மீது பயம் போய் விடும்

தூத்துக்குடிMar 29, 2023 - 04:34:48 PM | Posted IP 157.4*****

அடிக்காதவரை யாரும் திருந்த வாய்ப்பில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory