» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

கோவை சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி காட்சியரங்குகள் அமைக்க விரும்பும்  தொழில் நிறுவனங்கள் ஜன.13-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு இலக்கை அடைய ஜவுளி தொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், கருத்தரங்குகள் (Conference), கண்காட்சி (Exhibition), வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets) மற்றும் அழகுநயப்பு காட்சி (Fashion Show) ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.01.2026-க்குள் மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் [email protected]. மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம்,
எண்.34 விஸ்வநாதபுரம் மொயின் ரோடு,
விஸ்வநாதபுரம், மதுரை-14
தொலைபேசி எண்கள்.8220017071/8220656182

மேலும், மேற்காண் கண்காட்சியில் Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brands from Tamilnadu, Technical Textiles, Sustainablity and Recycling, Raw Material/ Recycled Textile/ Man Made Fibre ஆகிய காட்சியரங்குகள் பங்கு கொள்ள இருப்பதால் ஜவுளித் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory