» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

திருநெல்வேலியில் தூய்மைப்பணியாளர்கள் நலவாரியம் உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்ததாவது: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தூய்மைப் பணியாளர் என்ற பெயரை சூட்டி சமூகத்தில் அனைவரிடமும் சமம் என்ற அடிப்படையினை உருவாக்கினார். அந்த வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களுக்கான வாரியத்தினை சிறப்பாக செயல்படுத்தி, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையினை ஏற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
அதனடிப்படையில் தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பணியிடத்தில் விபத்து மரணம் இழப்புத்தொகையாக ரூ.5 இலட்சமாக இருந்ததை தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.10 இலட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
தூய்மை பணியாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செய்து தரும் என தெரிவித்துள்ளார்கள். எனவே தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து, நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மாநில உறுப்பினர்கள் பூ.மூக்கையா, விஜய் சங்கர், முனியாண்டி, மாநகர நல அலுவலர் மரு.பெ.ராணி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) .இரா.சுதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .பூங்கொடி உட்பட அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)


