» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)
கடையநல்லூர் காவல் நிலையம் அருகிலேயே பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செல்வவிளை 3-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மனைவி மாரியம்மாள் (50). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கடையநல்லூர் காவல் நிலையம் முன்பாகச் சாலையோரம் அவர் நடந்து சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர் திடீரென மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார்.
திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் "திருடன்... திருடன்..." என்று சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர், அந்த நபரை அங்கிருந்த கடையநல்லூர் போலீஸ் நிலையத்திலேயே ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் கடையநல்லூர் வானவர் தெருவைச் சேர்ந்த சேக் மைதீன் மகன் அருமன் சாலிஹ் (30) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிச்சலான நகை பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

