» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் வாக்குச்சாவடிகள் மாற்றம் : மொத்த எண்ணிக்கை 1517ஆக உயர்வு

வியாழன் 26, அக்டோபர் 2023 5:33:02 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவை பிரிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தவும் மற்றும் வாக்காளர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கி.மீட்டர் தொலைவிற்கு அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றினை வாக்காளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே மாற்றம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பேரில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியான எண் 148 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சம்சிகாபுரம் மற்றும் எண் 150 வசந்தா தொடக்கப்பள்ளி. வீராணபுரம் ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளில் இருந்து மறுசீரமைப்பு செய்து எண் 151 புதிய வாக்குச்சாவடியாக ஹரிஜன் தொடக்கப்பள்ளி, மலையடிப்பட்டி உருவாக்கப்பட்டது.
தென்காசி தொகுதிக்குட்பட்ட எண்64 காட்டுப்பாவா நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியினை இரண்டாகப் பிரித்து புதிதாக எண் 65 புதிய வாக்குச்சாவடி அதே பள்ளி கட்டிட அமைவிடத்தில் உருவாக்கப்பட்டது.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக 9 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டு எண் 3 சோமசுந்தரம் இந்து தொடக்கப்பள்ளி, கீழப்பாவூர் வாக்குச்சாவடி இரண்டாகப் பிரித்து ராஜபாண்டியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் புதிதாக எண் 4 வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது. எண் 129 இந்து நடுநிலைப்பள்ளி, உடையாம்புளி வாக்குச்சாவடி இரண்டாகப் பிரித்து புதிதாக 131 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொல்லன் குளம் வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

எண் 154 பாரதி தொடக்கப்பள்ளி, துப்பாக்குடி வாக்குச்சாவடி இரண்டாகப் பிரித்து புதிதாக வாக்குச்சாவடி எண் 157 துப்பாக்குடி, இ-சேவை மையத்தில் செயல்பட உருவாக்கப்பட்டது. எண் 170 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, லட்சுமியூர் மற்றும் 173 திருமுருகன் உயர்நிலைப்பள்ளி, வள்ளியம்மாள்புரம் வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்து எண் 174 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அழகம்மாள்புரம் வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

எண் 178 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு மடத்தூர் வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரித்து எண் 183 காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. எண் 189 செக்கடியூர், கீழக்கடையம் வீர உலகம்மாள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரித்து எண் 195 கேளையா பிள்ளையூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

எண் 225 சிவசைலம் ஸ்ரீஆத்ரி கலா நிலைய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி இரண்டாகப் பிரித்து எண் 232 பெத்தான்பிள்ளை குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது. எண் 244 ஆழ்வார்குறிச்சி, பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி மற்றும் எண் 245 சிவசைலம், ஔவை ஆசிரமம் வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்து எண் 252 செங்கானூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது.

எண் 305 வடக்கு அரியநாயகிபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரித்து எண் 314 அரசன்குளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது

மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள 40 வாக்குச்சாவடி கட்டடங்களுக்குப் பதிலாக அதே அமைவிடத்தில் உள்ள புதிய கட்டிடங்களுக்கும், அருகே உள்ள அரசு கட்டடங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம் மாற்றங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள https://tenkasi.nic.in/election  என்ற மாவட்ட இணையதள முகவரியில் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம் என்ற விபரம் அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
  • தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு முன்பு உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1506 
  • தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு பின்பு உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1517
  • புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை (சங்கரன்கோவில் – 1, தென்காசி – 1, ஆலங்குளம் – 9) 11
  • வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மாற்றம் 111 
  • வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 8.
இத்தகவல்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory