» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

200 ஆண்டு பழமைவாய்ந்த மாமரத்தை வெட்டிய அதிகாரிகள்: பக்தர்கள் கடும் எதிர்ப்பு

திங்கள் 30, அக்டோபர் 2023 8:09:41 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் வளாகத்தில் இருந்த 200 ஆண்டு பழமைவாய்ந்த மாமரத்தை அதிகாரிகள் வெட்டினர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் முதலாவது தலமாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தின் உட்பிரகாரத்தில் சொர்க்கவாசலுக்கு அருகே சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த 2 மாமரங்கள் அடர்ந்து வளர்ந்து நின்றது. அதில் ஒரு மரத்தின் கிளையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றில் முறிந்து விழுந்து விட்டது. 

இந்நிலையில் அந்த மாமரங்களை வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்து நேற்று காலை மரத்தை வெட்டும் பணிகளை தொடங்கினர். ஒரு மாமரத்தின் கிளைகள் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டது. இதை அறிந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளான முத்துராமலிங்கம், சித்திரைவேல், ஸ்ரீரங்கன், கோபால், காசிராமன், மணிகண்டன் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து, பழமைவாய்ந்த மரத்தை வெட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பழமையான மரத்தை வெட்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவும் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று உரிய அனுமதி இன்றி மரத்தை வெட்டக்கூடாது என்று கூறி அதற்கு தடை விதித்தனர். இதனால் மரத்தை வெட்டும் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. அதன்பிறகே பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory