» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் 612பேருக்கு பணிநியமன ஆணை!

சனி 2, டிசம்பர் 2023 4:53:04 PM (IST)



நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்த தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற 612 பேருக்கு சபாநாயகர் மு.அப்பாவு பணிநியமன ஆணை வழங்கினார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இன்று (02.12.2023) நடைபெற்ற தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற 612 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், குடிப்பெயர்வோர் பாதுகாவலர், வெளியுறவுத்துறை அமைச்சம் எம்.ராஜ்குமார், இந்திய வெளிநாட்டுப்பணி, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலைமச்சர் தமிழ்நாட்டில் அதிகமாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் அதிகமாக தொழிற்சாலைகள் தொடங்கி அதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 100 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவித்தார்கள்;. அதன்படி இதுவரை தமிழ்நாட்டில் 70 தனியார்த்துறை வேலை வாயப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 27,394 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் முதல் வேலைவாய்ப்பு முகாம் 05.08.2023 அன்று புனித யோவான் கல்லூரியில் நடைபெற்றது. அதில் 128 வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 521 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இரண்டாவது வேலைவாய்ப்பு முகாம் 14.10.2023 அன்று பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து நடத்தப்பட்டது. 

இதில் 104 வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 533 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று வேலை வாயப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 103- வேலையளிப்போர் (நுஅpடழலநசள) கலந்து கொண்டு 612 வேலைநாடுநர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் 2112 வேலைநாடுநர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், டாட்டா சோலார் பவர் நிறுவனத்திற்கென பிரத்யேகமானவேலைவாய்ப்பு முகாம் 29.04.2023 அன்று திருநெல்வேலி சாராள்டக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 4320 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டதில் 1006 பேர் பணிநியமனம் பெற்றார்கள்.

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தனியார் ஏஜென்சியிடம் பல இலட்சங்கள் கொடுத்து வேலை நாடுநர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையை ஒழிக்க வேண்டும், சாமானிய மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுபேற்ற பிறகு இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் முதல் முறையாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமும், அயல் நாட்டில் வேலைக்கு தேர்வு செய்யும் அனுப்பும் அரசு அங்கீகாரம் பெற்ற 8 பெரிய நிறுவனங்களும் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அரசு அங்கீகரிக்கப்ட்ட நிறுவனங்கள் மூலம் அயல்நாட்டுகளுக்கு வேலை செல்லும் போது தங்கள் பணிக்கும் தங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை நடத்தப்பட்ட 6 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களில் 4810 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்குவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வேலை வாய்ப்பை பெற்று வேலையில் சிறப்பாக பணியாற்றி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார்த்துறை வேலை வாயப்பு முகாம் பெரிய அளவிலும் சிறிய அளவிலும் தனிதனித்தாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முகாம்களிலும் வேலையளிப்போர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்ந்;தெடுத்து வருகிறது. தற்சமயம் சிறு நிறுவனங்களில் பணியில் சேருபவர்கள் பெரிய நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பெரிய நிறுவனங்களில் அதிகம் சம்பளத்துடன் தேர்வாகி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை வாய்பை அதிகமாக்க வேண்டும் என்பதற்காகவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்கள் வெளிநாட்டுகளுக்கு வேலை சென்று ஏமாறக்கூடாது என்பதற்காக இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் அயல்நாட்டுகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் அனுப்பும் அரசு அங்கீகாரம் பெற்ற 8 பெரிய நிறுவனங்களும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமும் இன்று கலந்து கொண்டு தேர்வு செய்தனர். இன்று நடைபெற்ற முகாமில் வேலைநாடுநர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த வழிமுறைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கப்பட்டன. மேலும் யாரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தேவை இல்லாத நபர்களிடம் ஏமாற வேண்டாம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் சென்று வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து இன்று நடைபெற்ற முகாமில், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் குடிப்பெயர்வோர் பாதுகாவலர், வெளியுறவுத்துறை அமைச்சம் எம்.ராஜ்குமார், இந்திய வெளிநாட்டுப்பணி, தலைமையில் வேலைநாடுநர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மண்டல இணை இயக்குநர் (வேலைவாயப்பு) கா.சண்முகசுந்தர் , அயல்நாட்டு வேலை வாயப்பு நிறுவனம் நிர்வாக அலுவலர் எம்.லதா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி, கல்லூரி முதல்வர் வேல்முருகன் முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி மற்றும் தனியார் நிறுவன பொறுப்பாளர்கள், வேலைநாடுநர்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory