» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பேட்டை ஐடிஐயில் டிச. 11இல் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 7, டிசம்பர் 2023 12:49:54 PM (IST)
பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் டிச.11-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், ஐடிஐ பயின்று தோ்ச்சிப் பெற்ற பயிற்சியாளா்கள், பொறியியல் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயச் சான்றிதழ் பெற்ற இளைஞா்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம்.மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையை சோ்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞா்கள், இளம்பெண்களை தோ்வு செய்ய உள்ளனா்.
பயிற்சியாளா்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தோ்ச்சி பெற்ற சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும். பயிற்சி நிறுவனங்கள் இணையதள முகவரியிலும், இளைஞா்கள், இளம்பெண்கள், இணையதள முகவரியிலும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தகவலுக்கு பேட்டை ஐ.டி.ஐ.க்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2342432, 9499055790 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.