» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழில் முனைவு நிதி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

வெள்ளி 8, டிசம்பர் 2023 12:51:48 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மதி சிறகுகள் மையத்தில் காலியாக உள்ள தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprises Finance Officer) ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தென்காசி மாவட்டத்தில் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய இரண்டு வட்டாரங்களை சார்ந்த 44 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ் வட்டாரத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM) அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட மையத்தில் காலியாக உள்ள தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprises Finance Officer) ஒப்பந்த பணியிடத்திற்கு ஏதேனும் முதுகலை பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள 40 வயதுக்கு உட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 6.12.2023 முதல் 15.12.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தேவி மருத்துவமனை வளாகம், இரண்டாவது தளம், நம்பர் 1 வசந்த் நகர் மாவட்ட அறிவியல் மையம் பின்புறம், கொக்கிரகுளம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன்; தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory