» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி பெண் குறித்து முகநூலில் அவதூறு : பொள்ளாச்சி வாலிபர் கைது

சனி 9, டிசம்பர் 2023 8:23:49 AM (IST)

தென்காசி பெண்ணை பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய பொள்ளாச்சியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவருக்கு ஆபாசமாக வார்த்தைகளுக்கும், தவறான செயலுக்கும் அழைக்கவும் என அவரது கைப்பேசி நம்பரை முகநூல்  பக்கத்தில் ஒருவர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அப்பெண் தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் சஞ்சய்குமார், உத்தரவின் பேரில் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரின் அறிவுரையின்படி, தென்காசி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி, உதவி ஆய்வாளர் செண்பகபிரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் மற்றும் காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தென்காசி பெண்ணைப்பற்றி முகநூலில் வெளியிட்டவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த  ஜனகர் (32) என தெரிய வந்தது. அவரை போலீசார் பொள்ளாச்சியில் வைத்து கைது செய்து, தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் ஜனகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory