» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்து முன்னணி 2 நாள் பயிற்சி முகாம் துவக்கம் : நெல்லை, தூத்துக்குடி நிர்வாகிகள் பங்கேற்பு!

சனி 9, டிசம்பர் 2023 11:31:54 AM (IST)



புளியங்குடியில் இன்று துவங்கிய இந்து முன்னணி 2 நாள் பயிற்சி முகாமில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இந்துமுன்னணி நெல்லை கோட்ட இரண்டு நாள் பயிற்சி முகாம் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இன்று காலை தொடங்கியது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருவிளக்கு ஏற்றி துவக்க உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் த.அரசுராஜா, மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெ.சக்திவேல் ஆகியோர் முகாமினை  வழிநடத்தி வருகின்றனர் 

துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டார். நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். 

முகாம் ஏற்பாடுகளை நெல்லை கோட்டத் தலைவர் தங்கமனோகர் கோட்டச் செயலாளர்கள் கண்ணன், ஆறுமுகசாமி, தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்


மக்கள் கருத்து

ரா.சங்கரவேல்Dec 9, 2023 - 02:56:20 PM | Posted IP 162.1*****

ஜெய்ஸ்ரீராம்!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory