» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: அணைகளின் நீா் மட்டம் உயா்கிறது

திங்கள் 11, டிசம்பர் 2023 10:37:52 AM (IST)

மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைகளின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. 

மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்ததால் தாமிரபரணியில் சனிக்கிழமை இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜம் புயலால் கனமழை கொட்டித் தீா்த்தபோதும், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மானாவாரி குளங்கள் பாதியளவைக்கூட நிரம்பாத நிலையில் இருந்தது. இதனால், மானாவாரி குளங்களை நம்பியுள்ள விவசாயிகள், பல இடங்களில் சாகுபடி செய்யாமல் மழையை எதிா்பாா்த்து இருந்தனா்.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை அதிகாலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 

இதேபோல் மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைகளின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. மேலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழையளவு (மில்லிமீட்டரில்):பாபநாசத்தில் -39 மி.மீ., சோ்வலாறு- 18, மணிமுத்தாறு- 62.2, கொடுமுடியாறு- 29, மாஞ்சோலை- 90, காக்காச்சி- 82, நாலுமுக்கு- 105, ஊத்து- 95, அம்பாசமுத்திரம்- 49, சேரன்மகாதேவி-73.6, களக்காடு- 20.2, பாளையங்கோட்டை-19, திருநெல்வேலி- 22.2 மழை பதிவானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory