» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா!

வியாழன் 21, டிசம்பர் 2023 1:10:36 PM (IST)



நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு வாழ்த்துக்களுடன் நடைபெற்றது.  தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு  தலைமை தாங்கினார். விழாவுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை விருந்தினராக பங்கேற்றா,  சிறப்பு விருந்தினராக நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக சார்பு வேந்தர் பெருமாள்சாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் வேல்முருகன்  வரவேற்புரை ஆற்றினார். பின்னர் தலைமை  விருந்தினர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்  பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பொறியாளர்களின் முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது, செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிசிஸ், ஐ.ஓ.டி போன்ற துறைகள் மிக முக்கியமாக உள்ளன. 

அந்த துறைகளில் எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களது அணுகுமுறை தான் வெற்றிக்கு  வழிவகுக்கிறது. இந்த பொறியியல் கல்லூரி நிர்வாகம் 600 கிராமங்களை தத்து எடுத்து சமூக சேவை ஆற்றி வருவது பாராட்டுக்குரியது.மேலும், சமூக வளர்ச்சிக்கு கல்லூரி  பாடுபட்டு வருவதை பாராட்டுகிறேன். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசிகள் இருந்தால் தான் நீங்கள் வெற்றி பெறமுடியும். இவ்வாறு  பேசினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர் பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். கல்லூரி முதல்வர் வேல்முருகன்  பட்டமளிப்பு  உறுதிமொழி மேற்கொண்டார். தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவர், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். விழாவில், 540 மாணவர், மாணவிகள் பட்டம் பெற்றனர். 32 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை (Rank) சான்றிதழ்களைப் பெற்றனர்.  அதில் 16 பேர் தங்க பதக்கம் பெற்றனர்.

இவ்விழாவில் தலைமை விருந்தினர் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் வேல்ராஜ், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக சார்பு வேந்தர் பெருமாள்சாமி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.  இதனையடுத்து தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு  19வது பட்டமளிப்பு விழா நிகழ்வை முடித்து வைத்தார்.  கல்வி சார் பேராசிரியர் எல்.ஆர்.பிரியா நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில், பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன்,  இயக்குநர்கள் ஜான் கென்னடி,  முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன்,   திறன்  பயிற்சித்துறை டீன் பாலாஜி  மற்றும்  கல்லூரியின் அனைத்து துறை  பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகாரியா காபிரியேல் சிறப்பாக செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory