» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெட்ரோல் பங்க் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை : நெல்லையில் பயங்கரம்!

திங்கள் 1, ஜனவரி 2024 8:28:21 AM (IST)

நெல்லையில் பெட்ரோல் பங்க் ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் முத்துபெருமாள் (34). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். மேலும் யூ-டியூப் சேனலும் நடத்தி வந்தார். இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் சிவந்திபட்டி வழியாக நெல்லை பாளையங்கோட்டைக்கு 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி சாய்பாபா கோவில் அருகில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று முத்துபெருமாளை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த முத்துபெருமாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் 3 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்துபெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது நெல்லை மேலப்பாளையம் கருங்குளம் சோதனைச்சாவடி வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக தப்பி சென்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று, முன்னீர்பள்ளம் சோதனைச்சாவடியில் மடக்கி, 2 பேரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி சென்று விட்டார்.

பிடிபட்ட 2 பேரையும் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டியன், முத்துகிருஷ்ணன் என்பதும், முன்விரோதம் காரணமாக முத்துபெருமாளை கொலை செய்ததும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய உய்க்காட்டான் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாலைமறியல்

இதற்கிடையே முத்துபெருமாள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் மெயின் ரோட்டில் அவருடைய உறவினர்கள், கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை- திருச்செந்தூர் இடையே சென்ற வாகனங்களை கருங்குளம், கொங்கராயகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டத்துக்கு திருப்பி விட்டனர்.

தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பு, கருங்குளம் ஆகிய இடங்களிலும் முத்துெபருமாள் கொலையைக் கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் வல்லநாடு வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட எஸ்.பி.,கள் சிலம்பரசன் (நெல்லை), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி) மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உறவினர்கள், கிராம மக்கள் கலைந்து செல்லாததால் மாலையிலும் போராட்டம் நீடித்தது. பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நெல்லை, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory