» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை? போலீசார் விசாரணை

வியாழன் 4, ஜனவரி 2024 8:09:58 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரயில் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள தெருவில் வசித்து வருபவர் மணிமாறன். ஜோதிடரான இவர், நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் உள்ள வளாகத்தில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார்.

இவருடைய மகன் உதயகுமார் (24). கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் காயத்திரி (15). கல்லிடைக்குறிச்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் மாலை 6 மணிக்கு மேல் டியூசன் செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் காயத்திரி டியூசனுக்கு செல்லாமல் புத்தக பையோடு அங்கும், இங்கும் சுற்றித் திரிந்து உள்ளார். தொடர்ந்து கல்லிடைக்குறிச்சியில் இருந்து சிங்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதிக்கு நடந்து சென்றார்.

இரவு 7.30 மணி அளவில் அந்த வழியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நெல்லை நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது காயத்திரி திடீரென ரெயில்வே கேட் பகுதியை கடந்து சென்றதாகவும், இதனால் ரெயில் அவா் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் தென்காசி ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதியதால் மாணவி இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






மக்கள் கருத்து

billaJan 7, 2024 - 10:36:14 PM | Posted IP 172.7*****

TRAIN SPEED and LOCO PILOT details collect

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory