» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகதில் சமத்துவ பொங்கல் விழா!

வெள்ளி 12, ஜனவரி 2024 5:35:15 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (12.01.2024) சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தெரிவித்ததாவது: தை திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாய பெருமக்கள், வணிகர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொங்கல் அனைவருக்கும் மிக சிறப்பாக அமைய வேண்டும். அதேப்போல போகி பண்டிகையை இயற்கையோடு இருக்கின்ற பாரம்பரிய பண்பாடு வழக்கபடி எதையும் எரிக்காமல் இயற்கையான முறையில் போகி பண்டிகையினை பண்பாட்டு முறையில் கொண்டாட வேண்டும். பொங்கல் திருவிழாவை அனைவரும் ஒற்றுமையோடு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். ஒற்றுமை தலைக்கட்டும், பொங்கல் பொங்கட்டும் பொங்கலோ பொங்கல் என மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன்,  திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் ஷேக் அயூப்,  சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை ஆட்சியர் ஜெயா,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர்,  வேளாண்மை துணை இயக்குநர் கிருஷ்ணகுமார், தேசிய தகவல் மைய அலுவலர் ஆறுமுக நயினார்,  பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் தேர்தல் பாலகிருஷ்ணன்,  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory