» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவனை கடத்தி பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

சனி 17, பிப்ரவரி 2024 8:35:27 AM (IST)

நெல்லையில் மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிக்கூட பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த 14 வயது மாணவன், அந்த பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 14-ந்தேதி காலையில் வழக்கம்ே்பால் பள்ளிக்கு சென்ற மாணவன், மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் மாணவனை தேடினர். ஆனாலும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், பாளையங்கோட்டை சமாதானபுரம் மனகாவலன்பிள்ளைநகரைச் சேர்ந்த அருள்ராஜ் (45) என்பவர் ஆசைவார்த்தை கூறி மாணவனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமையிலான போலீசார், அருள்ராஜின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். 

இதில், அவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற தனிப்படை போலீசார் அருள்ராஜை மடக்கி பிடித்தனர். அவருடன் இருந்த மாணவனையும் மீட்டனர். பின்னர் அவர்களை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அருள்ராஜ் மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அருள்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அருள்ராஜ் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வந்ததும், சமீபத்தில் அவர் வேலையை விட்டு நின்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory