» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

சனி 17, பிப்ரவரி 2024 8:43:59 AM (IST)

நெல்லையில் வங்கி அதிகாரி, மருந்து விற்பனை பிரதிநிதி வீடுகளில் நகை-பணம் கொள்ளையடித்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மீனாட்சிசுந்தரம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் கோகுல்நாத் (31). தனியார் வங்கி அதிகாரியான இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் நெல்லை சந்திப்பில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கிரில்கேட், மரக்கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிருந்தாவன்நகர் 2-வது தெருவை சேர்ந்த ஜெபகுமார் மகன் பார்த்தசாரதி (29). மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் கடந்த 3-ந் தேதி உடன்குடி செட்டியாபத்து கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டில் புகுந்து 14 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாஞ்சில் பிரித்வி, சுடலைகண்ணு, ஏட்டுகள் ராஜன், மணிகுட்டி உள்ளிட்டவர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த குமரேசன் மகன் சேர்மத்துரை (30), நெல்லை அருகே கீழநத்தம் மேலூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சீவ் (23), முக்கூடலை சேர்ந்த செல்வம் மகன் நிராஜ் (31), தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த முருகன் மகன் மணீஷ் கார்த்திகேயன் (20) என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம், 3 பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மணீஸ் கார்த்திகேயன் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory