» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புலிகள் கணக்கெடுப்புப் பணி: திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்ல 8 நாள்கள் தடை!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:21:31 AM (IST)

புலிகள் கணக்கெடுப்புப் பணி காரணமாக வரும் 27 வரை திருமலைநம்பி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி வனச் சரகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, செவ்வாய்க்கிழமை முதல் (பிப். 20) இம்மாதம் 27 வரை திருமலைநம்பி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு கோட்டத்தில் இன்று தொடங்கி பிப். 27 வரை வனத் துறை சாா்பில் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு, திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வனத் துறை சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. கணக்கெடுப்புப் பணிகள் முடியும் வரை திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக, திருக்குறுங்குடி வனச்சரக அலுவலா் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory