» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்: தெற்கு ரயில்வே

வியாழன் 22, பிப்ரவரி 2024 8:30:10 AM (IST)

பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), 25-ந்தேதி மற்றும் 27-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.20683) மாற்றுப்பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை), 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (20684) தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும்.

சென்னை சென்டிரல் - நாகர்கோவில்

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (12689) மாற்றுப்பாதையாக சேலம், ஈரோடு, திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 25-ந்தேதி இரவு 7.35 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12690) மாற்றுப்பாதையாக திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை சென்டிரல் வந்தடையும்.

இதேபோல குருவாயூரில் இருந்து 27-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) மாற்றுப்பாதையாக திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும், மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12665) மாற்றுப்பாதையாக திருச்சி, கரூர், ஈரோடு, போடனூர், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory