» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:44:59 PM (IST)



தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மாசி மகப் பெருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 15-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் அபிஷேக தீபாராதனையும் இரவில் கட்டளை தீபாராதனை மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

வழக்கமாக இந்த விழாவில் இரண்டு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படும். ஒரு தேருக்கு திருப்பணி நடைபெற்று வருவதால் ஒரு தேர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. காலை 5-40 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து 9-35 மணிக்கு காசி விசுவநாத சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் புறப்பட்டது. பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, பஞ்ச வாத்தியங்கள், மேளதாளங்கள் இசைக்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-30 மணிக்கு நிலையை அடைந்தது.

இதன் பின்னர் 10-45 மணிக்கு அதே தேரில் உலகம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 11-45 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் தென்காசி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory