» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழ்நாட்டில் 6 தொகுதிகளில் நாடார்களை நிறுத்த வேண்டும்: நாடார் சங்கம் கோரிக்கை

ஞாயிறு 10, மார்ச் 2024 9:09:54 AM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 6 தொகுதிகளில் நாடார் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னை போரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் வீ.ஆனந்தராஜ், பூந்தமல்லி நாடார் சங்கத்தின் செயல் தலைவர் பூவை எஸ்.ஜெயக்குமார், என்.ஆர்.டி. பவுண்டேஷன் பொதுச்செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு நாடார் இளைஞர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் பால்பாண்டியன், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, வடசென்னை ஆகிய 6 தொகுதிகளில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும்.  தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும். நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து

ArunkumarMar 11, 2024 - 03:39:07 PM | Posted IP 162.1*****

pakkalam

ArunkumarMar 11, 2024 - 03:39:06 PM | Posted IP 162.1*****

pakkalam

ArunkumarMar 11, 2024 - 03:39:06 PM | Posted IP 162.1*****

pakkalam

ramya nellaiMar 11, 2024 - 03:38:01 PM | Posted IP 162.1*****

vetri namathe

BalaMar 11, 2024 - 12:07:00 AM | Posted IP 172.7*****

Yen konar eh niruthina ootu poda maateengala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory