» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு மருத்துவமனை புதிய கட்டிடங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

வெள்ளி 15, மார்ச் 2024 12:35:06 PM (IST)



நெல்லை மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனை கட்டடிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரியில் இரண்டாம் நிலை பிரிவு மருத்துவமனை கட்டடம் மற்றும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று (15.03.2024) சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

அதனைத்தொடர்ந்து, கண்டியப்பேரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் கலந்து கொண்டு, கல்வெட்டினை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், கண்டியப்பேரி பா.இராமசாமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில்; புதிய இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டும் பணி 04.06.2021 அன்று தொடங்கப்பட்டது. மேலும், இம்மருத்துவனையில் 4.78 ஏக்கர் நிலத்தில் 60,643 சதுர அடி பரப்பளவில் ரூ.35.18 கோடி மதிப்பில் கட்டடம் கட்டுமானம், ரூ.1.46 கோடி மதிப்பில் மருத்துவ வாயு அமைக்கம் பணி, ரூ.1.86 கோடி மதிப்பில் நவீன அறுவை அரங்கம் அமைக்கும் பணி, ரூ.0.16 கோடி மதிப்பில் நவீன சமையலறை, ரூ.0.32 கோடி மதிப்பில் நவீன சலவையகம் என மொத்தம் ரூ.38.95 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை அறைகள் இரண்டாம் நிலை பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, மின்னொளிர் கதிர், ஊடுகதிர், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, பொது அறுவை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய பரிவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பாசமுத்திரம் வட்டம் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மகப்பேறு மற்றம் குழந்தைகள் நலன்களுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.6.89 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைதளத்தில் பிரசவத்திற்கு முந்தைய அறுவைசிகிச்சை அறை, பிற்தைய அறுவை சிகிச்சை அறை, 15 படுக்கை வசதி கொண்ட அறை, பிரசவ அறை, ஊடுகதிர் அறை, ஊசிபோடும் அறை, மகளிர் மருத்துவ அறை, மருத்துவர் அறை, செவிலியர் அறை, நோயாளிகள் காத்திருக்கும் அறை, பொது கழிப்பிட வசதி -2, இயங்கு ஏணி (லிப்ட் வசதி) வசதிகளும், முதல் தளத்தில் 20 படுக்கை வசதி கொண்ட அறை (பிரசவத்திற்கு பிந்தைய அறை) 20 படுக்கை வசதி கொண்ட அறை (மீட்பு அறை), 10 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தை அறை, அறுவை சிகிச்சை அறை -2, தீவிர சிகிச்சை பிரிவு அறை, செவிலியர் அறை, பொதுக்கழிப்பிட வசதிகள் அமையப்பெற்றுள்ளது.

பொதுமக்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் கண்டியப்பேரியில் இரண்டாம் நிலை பிரிவு மருத்துவமனை கட்டடம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் உலகநாதன் . துணை முதல்வர் டாக்டர் சுரேஷ் துரை, அமுதாராணி, முகமத் ரபிக், சரவணன், தீபா, கவிதா, சுஜாதா செந்தில், ரவி, கமலின் ஷீபா, கண்டியப்பேரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ரேணுகா மற்றும் செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory