» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ரூ.26.30 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழா!

வெள்ளி 15, மார்ச் 2024 4:12:58 PM (IST)



பாளையங்கோட்டை- சிவந்திப்பட்டி சாலையில் ரூ.26.30 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை- சிவந்திப்பட்டி சாலை கி.மீ 0/8ல் ரூ.26.30 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆப., ஆகியோர் தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆகியோர் முன்னிலையில் இன்று (15.03.2024) திறந்து வைத்தார்.

பாளையங்கோட்டை - சிவந்திப்பட்டி சாலையில் கடவு எண்.6ல் இரயில்வே கி.மீ.6/600-700ல் பாளையங்கோட்டை மற்றும் செய்துங்கநல்லூர் இரயில்வே நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் அமைத்தல் பணி இரயில்வே திட்டப்பணிகள் கீழ் அறிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் சார்பில் திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் பயன்பாட்டு சாதனங்கள் மாற்றியமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூ.373.00 இலட்சமும், நிலம் கையகப்படுத்தும் வகைக்கு ரூ.315.00 இலட்சமும், நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 

மேலும், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் சார்பில் ரூ.2391.00 இலட்சத்திற்கு மேம்பாலம் பணி செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப அங்கீகாரம் ரூ.2630.00 இலட்சத்திற்கு தலைமைப்பொறியாளர்(நெ), திட்டங்கள் சென்னை அவர்களால் வழங்கப்பட்டது. பணியை மேற்கொள்ள ரூ.1312.21 இலட்சத்துக்கு ஒதுக்கீடு செய்து பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரயில்வே தூணுடன் இணைக்கக்கூடிய 2 மேல்தளப்பணிகள் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஒப்பந்தக்காரரால் முடிக்கப்பட்டது. அவ்விரண்டு மேல்தளங்களும் இரயில்வே துறையால் பணி முடிவு பெற்ற பின்னரே ஆரம்பிக்க முடியும் என்பதால், அசல் ஒப்பந்தம் முழுமையாக பணி நிறைவடையும் முன்னரே ஒப்பந்த முன்கொணர்வு செய்யப்பட்டது. 

இரயில்வே துறையினர் பகுதி பணியினை 10.08.2023 அன்று முடித்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட வேண்டிய மீதமுள்ள பணிகளுக்கு மறு ஒப்பந்தம் 24.07.2023 அன்று கண்காணிப்புப்பொறியாளர்(நெ), திட்டங்கள், மதுரை மூலம் அழைக்கப்பட்டு, 25.10.2023 அன்று வேலை உத்தரவு வழங்கப்பட்டது. 15.11.2023 அன்று ரூ.114.75 லட்சத்திற்கு ஒப்பந்த உடன்படிக்கை செயலாக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட வேண்டிய மேல் தளங்கள் அமைக்கும் பணி 13.02.2024 முடிவுற்றுள்ளது.

தற்போது இச்சாலை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் தியாகரஜநகர், அன்புநகர், மகாராஜநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியர்களும் எவ்வித சிரமமும் இன்றி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எளிதாக சென்று வரவும், பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் சந்தைகளுக்கு சென்று வரவும் ஏதுவாக அமையும் என்பதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும்; உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தலைவர் விஜிலாசத்தியானந்த், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் தங்கபாண்டியன், கண்காணிப்புப் பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், கோட்டப்பொறியாளர் (நெ) திட்டங்கள் அ.லிங்குசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், மண்;டலதலைவர்கள் பிரான்சிஸ், ரேவதிபிரபு, கஜிதா இக்லாம் பாசிலா, உதவி கோட்டப் பொறியாளர்கள் மாலிக் முகமது, காஜா மொகைதீன், உதவிப்பொறியாளர்கள் செல்வி.சுபா, ஜாபர் மற்றும் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory