» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 45 பறக்கும் படை: ஆட்சியர் தகவல்

புதன் 27, மார்ச் 2024 8:36:17 PM (IST)

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் வாக்காளர் செலவினங்கள் கண்காணிப்பு பணிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் வாக்காளர் செலவினங்கள் கண்காணிப்பு பணிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16.03.2024 முதல் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 45 பறக்கும் படை குழுக்களும் 45 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், பொது மக்கள் ரூ.50,000/- மேல் ரொக்கமாக எவ்வித உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லும் பட்சத்தில் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாவட்ட தொடர்பு மையத்தில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் (Voter Helpline) செயலி மூலமாகவும்; வாக்காளர்கள்/ பொதுமக்கள்/ வேட்பாளர்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.

தேர்தல் நன்னடத்தை விதிகளில் விதி மீறல் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 8375 மூலம் மாவட்ட தொடர்பு மையத்தில் புகார் அளிக்கலாம். மேலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
 
Cvigil என்ற இணையதள செயலி மூலமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் மற்றும் அரசியல் கட்சிகளின் செலவின விதி மீறல்களை பொது மக்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தெரிவிக்கும் வகையாக ஊஎபைடை தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படமாகவோ அல்லது 2 நிமிட வீடியோவாகவோ அனுப்பலாம்.
 
Samadhan என்பது தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் குறைகளுக்கு தீர்வு வழங்க கூடிய செயலி ஆகும். Sugam – தேர்தலில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஒற்றை சாரள முறையில் அனுமதி வழங்கக்கூடிய செயலிஆகும். Suvidha என்பது தேர்தலில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் உபயோகப்படுத்தும் வாகனங்கள், கட்சி அலுவலகம் ஒலிப்பெருக்கிகள், ஆகியவைகளின் அனுமதிக்காக உருவாக்கப்பட்ட செயலி ஆகும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்; தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory