» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கச்சத்தீவை திமுக - காங்கிரஸ் தாரைவார்த்தது மறக்க முடியாது - பிரதமர் மோடி பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2024 5:28:14 PM (IST)கச்சத்தீவை மற்றோரு நாட்டுக்கு திமுக - காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது என்று நெல்லை பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார். 

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்திரம் அருகேயுள்ள அகஸ்தியர் பட்டியில் இன்று (ஏப்.15) நடைபெற்று வரும் பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசும்போது, "நெல்லையப்பர், காந்திமதி அம்மையாருக்கு என்னுடைய வணக்கம். இந்த கூட்டத்தையும் உற்சாகத்தையும் பார்த்து காங்கிரஸ் கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும்.

 நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. தெற்கிலும் புல்லட் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டிகளில் 1.20 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலக புகழ் பெறும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைப்போம் என்று தெரிவித்துள்ளோம்.

தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை மற்றோரு நாட்டிற்கு தாரைவார்த்தது யார்?கச்சத்தீவை திரைமறைவில் வேறு நாட்டுக்கு திமுக - காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தில் ரகசிய செயல்களை பாஜகதான் வெளிக்கொண்டு வந்தது" எனப் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory