» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிரதமர் வருகையால் நெல்லையில் உதயசூரியன் அஸ்தமித்துள்ளது: நயினார் நாகேந்திரன் பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2024 5:47:13 PM (IST)

பிரதமர் மோடியின் வருகையால் நெல்லையில் உதயசூரியன் அஸ்தமித்துள்ளது என்று பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார். 

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். நெல்லை அகஸ்தியர்பட்டியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

அப்போது: "உலகெங்கும் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி மூன்று முறை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அதேபோல், மூன்றாவது முறை இந்தியாவின் பிரதமராக தொடர வேண்டும்.

பிரதமர் இன்று நெல்லைக்கு வருகை தரும் காரணத்தால், நெல்லையில் உதயசூரியன் அஸ்தமித்துள்ளது. வானமே உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. உதயசூரியன் மறைந்துவிட்டான். ஜூன் 4-க்கு மேல் 400-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமர் மோடியின் காலடியில் இருப்பர். இந்த மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, உதயசூரியன் எப்படி இன்றைக்கு மறைந்ததோ, அதேபோல் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மறைந்து போகும்” என்று அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory