» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அட்மிஷனுக்காக இரவு முழுவதும் காத்திருந்த பெற்றோர்.... நெல்லையில் கொடுமை!

திங்கள் 22, ஏப்ரல் 2024 10:11:36 AM (IST)



நெல்லையில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பத்திற்காக பெற்றோர்கள் இரவு முழுவதும் கொசுக்கடியில் தனியார் பள்ளி வாசலில் காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் ஜூன் மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு தனியார் பள்ளிகளில் தற்போது அட்மிஷன் நடைபெற்று வருகிறது. பிரபலமான பள்ளிகளில் சேர்த்தால் தான் குழந்தைகள் படிப்பார்கள் என்ற மனநிலை பெற்றோர் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தனியார் பள்ளிகளில் போட்டி அதிகரித்து விண்ணப்ப விற்பனை மூலமே லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் இன்று 22ம் தேதி எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதையொட்டியில் அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க, பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில் கொசுக்கடியில் படுத்து வரிசையில் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

இதுApr 23, 2024 - 09:15:50 AM | Posted IP 172.7*****

எல்லாம் நாடு உருப்பட போகுது? பிள்ளையை வைத்து சம்பாதிக்கும் எல்லாம் துட்டு பண மக்கள்.

ThadeusApr 22, 2024 - 10:50:02 AM | Posted IP 162.1*****

🤦🤦🤦

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory