» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ரவுடி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது : 2 பேரின் கை-கால் முறிந்தது!
திங்கள் 27, மே 2024 8:24:23 AM (IST)
நெல்லை ரவுடி கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரின் கை-கால் முறிந்தது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜா (28). இவர் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவரது பெயரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர். இவர் கடந்த 20-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தீபக்ராஜா கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான நவீன் மற்றும் அவரது கூட்டாளிகளான புளியங்குளத்தைச் சேர்ந்த லெப்ட் முருகராஜ், மேலச்செவலைச் சேர்ந்த லட்சுமிகாந்தன், சேரன்மாதேவியைச் சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரும் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், நவீன் உள்ளிட்ட 4 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் லட்சுமிகாந்தன், சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். நவீன், லெப்ட் முருகராஜ் ஆகிய இருவரும் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் காம்பவுண்டு சுவரின் மீது ஏறி குதித்து தப்பிக்க முயன்றனர்.
அப்போது சுவரில் இருந்து தவறி விழுந்ததில் நவீனுக்கு கையில் எலும்பு முறிவும், லெப்ட் முருகராஜிக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களையும் தனிப்படையினர் மடக்கி பிடித்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். காயமடைந்த நவீன், லெப்ட் முருகராஜ் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே தீபக்ராஜா கொலையில் தொடர்புடைய சுரேஷ், பவித்ரன், முத்து உள்ளிட்ட 5 பேர் கும்பலை தனிப்படை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் தலைமறைவாக உள்ள முத்து பொள்ளாச்சியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் பொள்ளாச்சிக்கு விரைந்தனர்.
இதற்கிடையே நேற்று 7-வது நாளாக தீபக்ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், அவர்களிடம் உடலை ஒப்படைக்க போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை அருகிலும், வாகைகுளம், முன்னீர்பள்ளம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)
