» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரண வழக்கு: 30 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!

திங்கள் 27, மே 2024 3:39:30 PM (IST)

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி எரிந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். இதை சந்தேக மரண பிரிவின் கீழ் உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா்.

ஆனால், இந்த வழக்கில் தனிப்படையினா் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கா் ஜிவால் கடந்த 23 ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கடிதத்தில் உள்ள நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory