» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
செவ்வாய் 16, ஜூலை 2024 8:53:34 AM (IST)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இரவு நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
தொடர்ந்து கனமழை பெய்ததால் நேற்றும் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீர் படிகள் வழியாக வழிந்தோடியது. இதேபோல் புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவிகளை பார்த்துவிட்டு திரும்பிச் சென்றனர். நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா SC, ST ஆணையத் தலைவர் தகவல்
திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)

தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
