» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாவது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 30 நாட்கள் நடை பெறும். கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் இரட்டை குளம்புகள் கொண்ட கலப்பின கால்நடைகளை தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும்.
நோய் பரவும் விதம்:
இந்த நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத் தட்டுகள், தண்ணீர், வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமும் பரவும் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.
நோய் அறிகுறிகள்
1. காய்ச்சல்
2. தீவனம் உட்கொள்ளாது மந்த நிலையில் இருக்கும்.
3. வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல ஒழுகிய வண்ணம் இருக்கும்.
4. வாயின் உட்பகுதி நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி பின்பு அவை உடைந்து ரணமாகி மாறும்.
5. அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும்.
6. சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம்.
7. பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத் தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும்.
8. பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்கவிடக் கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.
இந்நோய் தாக்குதலினால்
கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது.
எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது.
கறவை மாடுகள் சினை பிடிப்பது குறைகிறது.
இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது.
எனவே கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எந்தவித விடுபாடுமின்றி தங்கள் கால்நடைகளுக்கு காதுவில்லைகள் அணிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தெரிவித்துள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)

அங்கன்வாடி வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: பெண் கைது - இளம்பெண் தற்கொலை முயற்சி!
வெள்ளி 8, மே 2026 8:22:20 AM (IST)


