» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
முன்னதாக மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் வழங்கினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)


