» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிப்பு : வணிகர் சங்கம் குற்றச்சாட்டு!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 8:01:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்ததாக கூறி கடையை சீல் வைத்து பொய் வழக்கு போடுவதால் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிறு வணிகர்கள் ஏற்கனவே தொழில் நஷ்டம் காரணமாக பாதிக்கப்பட்டு வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக பழைய வழக்குகளை காரணம் காட்டி சிறு வணிகர்களை ஆறு முதல் 8 மாதங்கள் கழித்து காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தற்போது புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யாத நிலையில் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடையை பூட்டி சீல் வைக்கும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு சிறு வணிகர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் வணிகர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை பொய் வழக்கு போட்டு வணிகர்களை மிரட்டுவதை கைவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து

KalaSep 24, 2024 - 09:46:12 AM | Posted IP 162.1*****

Smoking avoid panuga

KalaSep 24, 2024 - 09:46:11 AM | Posted IP 172.7*****

Smoking avoid panuga

பாண்டிSep 23, 2024 - 12:10:07 PM | Posted IP 162.1*****

அரசு நடத்தும் டாஸ்மார்க் என்ன சத்துணவு கூடமா??

S.walkerSep 22, 2024 - 05:38:17 PM | Posted IP 172.7*****

எங்களது ஏரியாவில் உள்ள டீக்கடையில் பீடி சிகரெட் புகையிலை பொருள்கள் விற்பனை செய்கிறார்கள் இதனால் அங்கு பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் நாங்கள் அருகில் கடை வைத்திருப்பவர்களுக்கும் எங்களுக்கும் அசைவுரியம் ஏற்படுகிறது

நாகர்கோவில் ராஜ பகதூர்Sep 22, 2024 - 01:59:36 PM | Posted IP 162.1*****

அன்பான வியாபார பெருமக்களுக்கு மற்றும் சங்கத்தை சேர்ந்த நிர்வாக ரீதியான பெரியோர்களுக்கும் ஒரு அன்பான பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் பள்ளிக்கூடம் இருக்கும் ஏரியாக்களில் அதிக அளவில் பீடி சிகரெட் மற்றும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கோயிலை பொருட்கள் அதுமட்டுமல்லாமல் சாக்லேட் வடிவான விற்பனை செய்கிறார்கள் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சங்கத்தில் இடமில்லை என்று யாவாரப் பெருமக்கள் அறிவித்தால் நிச்சயமாக இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் ஆகவே வியாபார சங்கத்தைச் சேர்ந்த பெரியோர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 💐🙏

முட்டால் தமிழக அரசுSep 22, 2024 - 09:05:49 AM | Posted IP 162.1*****

நாங்க அப்படிதான் பண்ணுவோம். டாஸ்மாக் ல சத்து டானிக் விக்குரோம்.

JesurajaSep 22, 2024 - 07:00:55 AM | Posted IP 172.7*****

புகையிலையை விற்பவர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள் அப்டினு சொன்னா பாராட்டலாம். அதைவிடுத்து விற்பவர்களுக்கு சொம்பு பிடிப்பது சரியா சங்க நிர்வாகிகளே

மார்க்கண்டேயன்Sep 21, 2024 - 03:20:01 PM | Posted IP 162.1*****

டாஸ்மாக் கடைகளில் சத்து டானிக் விற்பனை செய்கிறார்கள் போலும். கடைக்காரர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அதை தயாரிப்பு செய்யும் கம்பெனிகளை மூடலாமே. பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் உள்ளது.

மாமன்னன்Sep 21, 2024 - 02:41:42 PM | Posted IP 162.1*****

போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். போதையில்லாத தமிழகம் உருவாக்குவோம்

தர்மலிங்கம்Sep 21, 2024 - 01:10:44 PM | Posted IP 162.1*****

வியாபாரிகளுக்கும் சுயக்கட்டுப்பாடு மிக அவசியம். தடை செய்யப்பட்ட பொருட்களை அரசின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு வணிகம் செய்வதும் தங்களது கடமையென உணரவேண்டும்.

kannanSep 21, 2024 - 12:09:11 PM | Posted IP 172.7*****

திமுக விக்கிரமா ராஜாட்ட போய் புகார் கொடுங்க மக்களே.

சிவsriSep 21, 2024 - 10:40:50 AM | Posted IP 172.7*****

கடைகளில் போதை விற்பனை செய்வது உண்மை . காமராஜ் கல்லூரி அருகில் உள்ள கடைகளில் lipகூல் விற்பனை செய்ததை கண் கொண்டு பார்க்கிறேன்.உண்மை.உண்மை.

முட்டாள்Sep 21, 2024 - 09:12:33 AM | Posted IP 172.7*****

அப்போ டாஸ்மாக் ல என்ன விற்கிறாங்க ??? போங்கடா துட்டு மாநகராட்சி

SelvakumarSep 21, 2024 - 03:19:28 AM | Posted IP 162.1*****

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல் தண்டனைகுறிய குற்றம் தானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory