» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்பில் சேதம்!

சனி 2, ஆகஸ்ட் 2025 4:48:24 PM (IST)

நெல்லை அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

நெல்லை மாவட்டம் பிரான்சேரி பகுதியில் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் கழிவுகள் குவிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இன்று பிளாஸ்டிக் குடோனில் தீ ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது.

தகவல் அறிந்து நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவியில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து தீயயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory