» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்.. தூய்மை பணிகள் பாதிப்பு

செவ்வாய் 22, அக்டோபர் 2024 11:13:34 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நூற்றுக் கணக்கானோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி மாநகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.725, ஓட்டுநர்களுக்கு ரூ.763, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ரூ.725 வழங்க வேண்டும், தூய்மை பணியில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்துவிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் முன்பணம், கரோனா காலத்தில் பணி புரிந்ததற்காக சிறப்பு தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

JeevaOct 23, 2024 - 01:30:30 PM | Posted IP 162.1*****

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory